சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து 5 நாட்களான பின்னும் விவாதத்திற்கு ஏற்க மறுக்கின்றனர். சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடல் தாயகம் கொண்டு வருவது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம். தமிழர்களை காப்போம் என்று சொல்லும் தவெக அரசு சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஈரானிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் தொடர்பான கவன ஈர்ப்பை விவாதத்திற்கு ஏற்க மறுக்கின்றனர். கடற்கொள்ளையர்கள் சுட்டதில் ஒரு மீனவர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 மீனவர்கள் சவுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசாங்கம் நடக்கவில்லை, ரீல்ஸ் மட்டும்தான் போடுகின்றனர். எதற்கு கத்துகிறார்கள் என தெரியாமலேயே கத்துகிறார்கள். எந்த அளவுக்கு வேகமாக தவெக ஆட்சி வந்துள்ளதோ, அதே வேகத்தில் படுபாதாளத்திற்கு சென்றுவிடும். மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் உடலை மீட்பது தொடர்பான நடவடிக்கை எடுக்காமல் தவெக அரசு தட்டிக் கழிக்கிறது. துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் உயிரிழப்பு குறித்து பேசும்போது தவெக எம்எல்ஏக்கள் சிரிக்கின்றனர். 3 மீனவர்கள் உடல் ஒருவாரமாக தமிழகம் கொண்டுவர முடியாமல் தவிக்கின்றனர். இதைவிட என்ன முக்கியமானது உள்ளது என்று தெரிவித்துள்ளார்.




