ஆதாரங்கள் அனைத்தும் உள்ளது…இடைத்தேர்தலிலாலவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா? – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

முந்தைய ஆட்சியில் 3 துறைகளை ஆய்வு செய்த அறிக்கை என் மேஜையில் உள்ளது என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்றைய கூநீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து, நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய பெரியசாமி, வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்து விட்டது என்றார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன்:

சமஸ் தொகுத்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகத்தை எ.வ.வேலு குறிப்பிட்டிருந்தார். விஜய் 100: ஊழலுக்கு எதிரான ஓர் அடி என சமஸ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். என்ன பேசினாலும் ஆதாரம் காட்டுங்கள் என எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். கடந்த ஆட்சியில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என ஒப்புக்கொண்ட ஐ.பெரியசாமிக்கு நன்றி என்றார்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பேசுகையில்,

முந்தைய ஆட்சியில் 3 துறைகளை ஆய்வு செய்த அறிக்கை என் மேஜையில் உள்ளது. கோப்புகள் என்னிடம் இருப்பதாக நிதியமைச்சர் கூறியிருந்தார். அது உண்மை தான். ஆதாரங்கள் அனைத்தும் என் மேஜையில் தான் உள்ளது. அந்த கோப்புகளை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள், எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்போம். மக்களிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று எனக்கு தெரியும், பேசிவிட்டு தான் வந்துள்ளேன். நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாலவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா? என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ஐ பெரியசாமி, நான் அன்பாக, அக்கறையாக, ஆசையாக பேசியதால் தான் மக்கள் என்னை 7 முறை எம்எல்ஏவாக ஜெயிக்க வைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.