தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்படுகிறது. இதனிடையே தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,270-க்கு, சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனையானது. இதனையடுத்து, நேற்றும் தங்கம் விலை சற்று உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,290-க்கு, சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,14,320-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,205-க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.5,000 குறைந்து ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




