அதிமுக பிரமுகரின் தார் தொழிற்சாலைக்கு சீல்

அதிமுக மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகனின் தார் தொழிற்சாலைக்கு சுற்றுசூழல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தருமபுரி மாவட்டம் பிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்திருந்த மனுவில்,…

அதிமுக மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகனின் தார் தொழிற்சாலைக்கு சுற்றுசூழல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தருமபுரி மாவட்டம் பிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்திருந்த மனுவில், பிளியனூர் கிராமத்தில் அதிமுக மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழனுக்கு சொந்தமான தார் தொழிற்சாலை இயங்கி வருவதாக கூறியிருந்தார். அதில், தார் தொழிற்சாலை காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாகவும், பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் நேரிடுவதாகவும் கூறியிருந்தார்.

அண்மைச் செய்தி: ‘அரசியல் காழ்புணர்ச்சியுடன் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதா’ – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

மேலும், கடந்த 8 ஆண்டுகளாக தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பேரில் தார் தொழிற்சாலையில் சுற்றுசூழல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, தொழிற்சாலையால் சுற்று சூழல் பாதிக்கப்படுவது உறுதியானதையடுத்து அதிகாரிகள் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.

சுற்றுசூழல் துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கைக்கு, அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், இனி தங்களின் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவது குறையும் எனவும் உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளும் பெரிய அளவில் குறையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.