‘ஆதரவாளர்களைக் கூட்டிக்கொண்டு வர வேண்டாம்’

ஆதரவாளர்களைக் கூட்டிக்கொண்டு வர வேண்டாம் என திமுகவின் சென்னை மேற்கு மாவட்டத்தினருக்கு மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் மிகச் சிறந்த அரசியல் கட்சியாக விளங்கும் திராவிட முன்னேற்றக்…

ஆதரவாளர்களைக் கூட்டிக்கொண்டு வர வேண்டாம் என திமுகவின் சென்னை மேற்கு மாவட்டத்தினருக்கு மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் மிகச் சிறந்த அரசியல் கட்சியாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகம், கிளைக் கழகத்தில் தொடங்கி தலைமைக் கழகம் வரை ஜனநாயக ரீதியாக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் மாபெரும் இயக்கம் என தெரிவித்துள்ள அவர்,

தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் நடக்கவுள்ள 15-வது உட்கட்சித் தேர்தலில் வட்டக்கழகத்தில் ஒரு அவைத் தலைவர், ஒரு செயலாளர், துணைச் செயலாளர்கள் மூவர் (பொது, ஆதிதிராவிடர், பெண்) ஒரு பொருளாளர், பகுதி பிரதிநிதிகளாக 5 பேர், ஆக 11 பேர் வட்டக்கழக செயற்குழு உறுப்பினர் 10 என மொத்தம் 21 பேர் விண்ணப்பிக்கவுள்ள நிர்வாகிகள், உறுப்பினர்கள் கவனத்திற்கு என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அண்மைச் செய்தி: அதிமுக பிரமுகர் தார் தொழிற்சாலைக்கு சீல்

அந்த அறிவிப்பில், நீங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை குறிப்பிட்டுள்ள நேரம், தேதியில் மாவட்டக் கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக வட்டக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கவுள்ளவர் மட்டும் வந்து உங்களுடைய மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள அவர், உங்கள் ஆதரவாளர்களைக் கூட்டிக்கொண்டு வர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.