ட்விட்டரை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்.
ட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் வாங்க தயாராக இருப்பதாகவும், இதற்காக ட்விட்டர் நிறுவன பங்குதாரர்களை சந்தித்து அவர் பேசி வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ட்விட்டரை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்.
உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் இருக்கும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளதால் நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடு உயர்வு எட்டியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய விரும்புவதாக டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் 9 புள்ளி 2 சதவீத பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், மொத்த ட்விட்டர் நிறுவனத்தையும் தற்போது, ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார். இதனால், “Twitter CEO” என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு, ட்விட்டர் நிறுவனத்தை வெளிப்படைத்தன்மை உடையதாக மாற்றவது, பிரச்னைக்குரிய ட்விட்டர் பயனர்களின் கணக்குகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படாமல், தற்காலிகத் தடை விதிப்பு போன்ற மாற்றங்களை செய்ய விரும்புவதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கை பற்றியுள்ளார். இதனால், என்னென்ன மாற்றங்கள் வரும் என்பது வருங்காலங்களில் தான் தெரியும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








