டிசம்பர் இறுதிக்குள் அதிமுக உட்கட்சி தேர்தல்

அதிமுகவின் உட்கட்சி தேர்தலை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என அக்கட்சி உறுதியளித்துள்ளது. அதிமுகவில் உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், மக்கள் பிரதிநிதித்து சட்டத்தின்படி…

அதிமுகவின் உட்கட்சி தேர்தலை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என அக்கட்சி உறுதியளித்துள்ளது.

அதிமுகவில் உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், மக்கள் பிரதிநிதித்து சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனவும் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் இந்திய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதிமுகவின் உட்கட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என அக்கட்சி உறுதி அளித்திருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கில் அதிமுகவை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.