இது புதுசால்ல இருக்கு.. ’நேசமணி, கோவாலு, கிச்னமூர்த்தி..’ மீண்டும் டிரெண்டான வைகை புயல்!

கமல்ஹாசனின் விக்ரம் பட பர்ஸ்ட் லுக்கை தழுவி ரசிகர்கள் உருவாக்கியுள்ள வடிவேலுவின் ’நேசமணி’போஸ்டர் டிரெண்டாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’விக்ரம்’ படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிப்…

கமல்ஹாசனின் விக்ரம் பட பர்ஸ்ட் லுக்கை தழுவி ரசிகர்கள் உருவாக்கியுள்ள வடிவேலுவின் ’நேசமணி’போஸ்டர் டிரெண்டாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’விக்ரம்’ படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இப்போது கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியிருப்பதால் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

அந்த போஸ்டரில், கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் இருந்தனர். போஸ்ட ரைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கமல்ஹாசன், ’வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்… விக்ரம்…’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இதைக் கொண்டாடினர். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து டர்மரீக் மீடியா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கும் படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் பணியாற்றுகிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருக்கும் கமல், ஃபகத், விஜய் சேதுபதி புகைப்படங்களுக்கு பதில், பிரண்ட்ஸ் படத்தில் நேசமணியாக நடித்திருக்கும் வடிவேலு, கிருஷ்ணமூர்த்தி ரமேஷ் கண்ணா, கோவாலு சார்லி ஆகியோரின் புகைப்படங்களை சில நெட்டிசன்ஸ் கிராபிக்ஸ் செய்து பதிவேற்றியுள்ளனர்.

இந்தப் படத்துக்கு ’நேசமணி’ என டைட்டில் வைத்து ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படம் கன்னாபின்னா வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.