அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் திமுகவில் இணைய உள்ளதாக திமுக-வை சேர்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேட்டியளித்துள்ளார்.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 23 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வழங்கும் விழா நடந்தது. இதில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆம்புலன்ஸை மருத்துவனைக்கு வழங்கினார். பிறகு எம்.ஜி.ஆர்., நகரில் மின்சாரம் இல்லாத 10 வீடுகளுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் சோளார் பேனல் வழங்கினார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 8 ஆம்புலன்ஸ்கள் உள்ளது. அந்த ஆம்புலன்ஸில் நோயாளிகளை உயர்சிகிச்சைக்காக சேலம் அழைத்து செல்ல போதிய வசதிகள் இல்லாததால், அனைத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸை தனது நிதியிலிருந்து வழங்கினேன். மேலும் அதியமான் கோட்டை இரயில்வே பாலம் விரைவில் திறக்க உள்ளது என்றார்.
பிறகு, திமுகவில் அதிமுகவினர் மேலும் இணைவார்களா என்ற கேள்விக்கு, கொங்கு மண்டலத்திலிருந்து மேலும் அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் இணை உள்ளனர். அதற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டு உள்ளது எனறார். பிறகு, முகநூலில் என்னைப்பற்றி மீம்ஸ் போடுறாங்க அது நன்றாக உள்ளது. இது தொடர வேண்டும். மனஅழுத்தமாக இருக்கும் மக்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கும் மீம்ஸ் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. அவர்களை பாராட்ட வேண்டும். மீம்ஸ் இல்லை என்றால், போரடிக்கும் என கூறினார்.







