குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் – ஆளுநர் அர்லேகர் வாழ்த்து!

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அரசியல் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட ஆயுளுடனும், தமது ஞானம், கருணை மற்றும் தேச சேவைக்கான முன்மாதிரியான அர்ப்பணிப்புடன் நமது தேசத்தைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.