திமுக கூட்டணியில் இருந்து ஐயூஎம்எல் விலகல்…! – பொதுக்குழுவில் தீர்மானம்

தற்போதைய அரசியல் சூழலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க இயலாது என்று ஐயூஎம்எல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியில் 2 இடங்களில் வெற்றிபெற்றது.

இத்தேர்தலில் முடிவில் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து ஐயூஎம்எல் தவெகவுக்கு ஆதரவளித்தது. மேலும் தவெக அமைச்சரவையிலும் இடம்பெற்றது.

இந்நிலையில் இன்றுள்ள சூழலில் திமுக கூட்டணியில் தொடர முடியாது என ஐ.யூ.எம்.எல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


சென்னை ராயபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டத்தில் “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து த.வெ.க. ஆட்சி அமைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்ததோடு, மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வருகின்றது. இன்றுள்ள அரசியல் சூழலில் தி.மு.க. கூட்டணியில் நாம் தொடர்ந்து பயணிக்க இயலாது. இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.