குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அரசியல் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தாங்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




