அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு இன்று மதியம் 3 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. பொதுக் குழுவில் இந்தப் பதவிகளுக்கு மாற்றாக பொதுச் செயலாளர் பொறுப்பை மீண்டும் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே அதிமுக உள்கட்சித் தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்களான வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதேபோல, அதிமுக பொதுக்குழுக்கு தடை விதிக்க கோரி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தணிகாச்சலம் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவின் மீது நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில், எதிர்தரப்பினர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
-ம.பவித்ரா