அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

தேவர் ஜெயந்திக்காக பசும்பொன் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து, அதிர்ஷ்டவசமாக முன்னாள் அமைச்சர்கள் உயிர்தப்பினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா ராமநாதபுரம்…

தேவர் ஜெயந்திக்காக பசும்பொன் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து, அதிர்ஷ்டவசமாக முன்னாள் அமைச்சர்கள் உயிர்தப்பினர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 115 ஆவது தேவர் ஜெயந்தி விழாவில் திருவாரூரில் இருந்து முன்னாள் அதிமுக முன்னாள் அமைச்சர்களும், இபிஎஸ் ஆதரவாளர்களுமான காமராஜர், விஜயபாஸ்கர், பாஸ்கரன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் பசும்பொன் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது மானாமதுரை-சிவகங்கை நெடுஞ்சாலையில் உள்ள வைகை ஆற்று பாலத்தை கடக்கும் போது முன்னால் அமைச்சர்களின் வாகனம் முன்னும் பின்னுமாக செல்லும் பொழுது வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.

இதில் முன்னால் அமைச்சர்களின் வாகனம் உட்பட 6 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில் அதிர்ஷ்டவசமாக முன்னால் அமைச்சர்கள் காயமின்றி தப்பினர்.உடன் வந்த அதிமுக நிர்வாகிகள் மணிகண்டன், ஜோதிபாசு, கல்யாணசுந்தரம், மதியழகன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் காயமடைந்தனர். இந்நிலையில் தேவர் ஜெயந்திக்காக பசும்பொன் சென்ற போது முன்னால் அமைச்சர்களின்  வாகனங்கள் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

– பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.