மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி அமைந்திட பாஜகவும் அதிமுகவும் ஒத்த கருத்துடன் செயல்பட்டு எதிரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை வருங்காலத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் தமாகா-வின் எண்ணம் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் சாதனையாளர் விருது வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் பேசுகையில், நாகூர் பட்டினச்சேரியில் குழாய் உடைப்பால் மீனவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஒரு காலகெடுவுக்குள் அந்தப் பணியை முழுமையாக செய்து முடிக்க வேண்டும். ஐந்து வருடங்களுக்கு பிறகு எல்லா திட்டங்களிலும் வளர்ச்சி அளிக்கும் எந்த அரசாங்கமும் இருந்தாலும், அடுத்து வர அரசாங்கமும் ஒவ்வொரு துறையிலும் சாதனை படைக்க நினைக்கிறது. மத்தியில் பாஜக அரசு 9 ஆண்டுகளாக இருக்கிறது. மகளிருக்கு மற்றவர்களை விட அதிக திட்டங்களை கொடுத்திருக்கிறது. இதற்கு மாற்று கருத்து கிடையாது இதற்கான புள்ளி விவரங்களும் இருக்கிறது.
அதிமுக ஆட்சியில் மகளிருக்கு அரிய திட்டங்கள் வழங்கி உள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக திட்டங்கள் கிடைத்தது என்பதற்கான புள்ளி விவரங்களும் உள்ளது. தமாக, பாஜக, அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். அவர்களின் நல்ல திட்டங்களை பாராட்டுவது என் கடமை. வெளி மாநில தொழிலாளர்கள் நலன் கருதி அரசு காவல்துறை கண்காணிக்க வேண்டும், எந்த துறையாக இருந்தாலும் அதை ஏற்று செய்யக்கூடிய தமிழகத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
அண்மைச் செய்தி : கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்– மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதலமைச்சர்
ஆன்லைன் சூதாட்டத்தை பொறுத்தவரையில் ஆளுநரை சந்தித்தபோது இதில் இருக்கும் கஷ்டங்கள் குறித்து எடுத்துரைத்தேன். ஆளுநர் அதில் சில சந்தேகங்கள் வைத்திருக்கிறார். அதைத்தான் சட்டத்துறை தமிழகத்திடம் கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் இது நிலுவையில் உள்ளது. எத்தனை சட்ட திருத்தங்கள் இருந்தாலும் அதை முறைப்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை நிறுத்த வேண்டியது கடமையாக இருக்கிறது. அதை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விரைவில் வீடு திரும்ப வேண்டும்.
இந்தியாவில் உள்ள ஆண்கள் எல்லாம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். தனிமனித ஒழுக்கம் வேண்டும். பாலியல் வன்கொடுமை போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் நிரூபிக்க பட்டால் சிறிய காலக் கெடுவுக்குள் அவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு தமிழ் மாநில காங்கிரஸின் வேண்டுகோளாக உள்ளது. இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.







