கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்– மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதலமைச்சர்

தனிநபர் கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில் தமிழ்நாடு மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ள செய்தியை பகிர்ந்து, தமிழ்நாட்டு பெண்கள் எந்தளவுக்குப் பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் செய்தி இது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தனிநபர் கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில் தமிழ்நாடு மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ள செய்தியை பகிர்ந்து, தமிழ்நாட்டு பெண்கள் எந்தளவுக்குப் பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் செய்தி இது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

கடன் வாங்கும் வசதிகளை பெண்கள் எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது குறித்து ஆய்வை கடன் தரவுகள் நிறுவனமான ’சிஆர்ஐஎப் ஹை மார்க்’ வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 35 வயது பெண்களே அதிகமாக கடன் வாங்குகின்றனர் என்று தெரியவந்துள்ளது. வீட்டுக்கடன் அதிகம் வாங்கும் பெண்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும் கர்நாடகா மாநிலம் 2-ம் இடத்திலும் தமிழ்நாடு மாநிலம் 3-ம் இடத்திலும் உள்ளது.

வணிக கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும் தமிழ்நாடு மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தனிநபர் கடன் வாங்குவதில் தமிழ்நாடு மாநிலம் முதலிடத்திலும் மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. கடன் வாங்கும் வசதியை பிற பகுதி மாநிலங்களில் உள்ள பெண்களை விட தென் மாநிலங்களில் உள்ள பெண்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்வதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அண்மைச் செய்தி : டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை – பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

இன்று நாளிதழ்களில் இந்த செய்தி வந்துள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், தலைப்பைப் பார்த்தால் எதிர்மறையாக இருக்கலாம். உண்மையில் அது நேர்மறையானதே. வீடு – வணிகம் சொத்து ஆகிய பிரிவுகளில் பல்வேறு தொழில்முனைவுகளுக்காக கடன் வாங்கும் பட்டியலில் தமிழ்நாட்டுப் பெண்கள் இரண்டாம் இடத்திலும் தனிநபர் கடனில் முதலிடத்திலும் உள்ளனர் என்பதுதான் அந்தச் செய்தி. பெண்களின் சமூக பங்களிப்பு இந்தியாவிலேயே தென் மாநிலங்களில்தான் அதிகம். அதிலும், தமிழ்நாட்டுப் பெண்கள் எந்தளவுக்குப் பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்தும் அந்தச் செய்தி,  உலக மகளிர் தினத்தில் மகிழ்ச்சியான செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.