பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 372 கழிப்பறைகளை தனியார் பங்களிப்புடன் பராமரிக்க சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் கூட்டு முறையில்
ரூ. 430.11 கோடி மதிப்பீட்டில் இராயபுரம், திரு.வி.க. நகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் மெரினா கடற்கரை உள்ளிட்ட 372 இடங்களில் புதிய
கழிப்பறைகளை கட்டவும், அதனை 8 ஆண்டுகளுக்கு பராமரிப்பை மேற்கொள்ளவும் என 9 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
குறிப்பாக, இந்த 3 மண்டலங்களிலும் புதிதாக 90 இடங்களில் 662 இருக்கைகள் கொண்ட
கழிவறைகளை கட்டமைக்கவும், 88 இடங்களில் ஏற்கனவே கட்டப்பட்டு அதிகளவு சேதமடைந்த 442 இருக்கைகளை சீரமைக்கவும், 194 லேசாக சிதிலமடைந்து இருக்கக்கூடிய 2,166 இருக்கைகளை சீரமைக்கவும் என 372 கழிவறைகளில் 3,270 இருக்கைகள் தனியார் வசம் பராமரிப்பு வழங்கப்பட்டு, இதற்கான பராமரிப்பு செலவாக ரூ. 430.11 கோடி திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க: கன்னியாகுமரி மேற்கு கடற்கரையில் கடல் சீற்றம்
மேலும், மீதமுள்ள மண்டலங்களில் உள்ள கழிப்பறைகள் இதே முறையில் பராமரிக்க திட்ட ஆலோசகர்கள் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில், அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி, M/s ஃபெர்க்ரா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
-ம.பவித்ரா








