“அண்ணாமலை என்ன அதிமுக தொண்டரா… அவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை?” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்!

அண்ணாமலை என்ன அதிமுக தொண்டரா, அவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய…

அண்ணாமலை என்ன அதிமுக தொண்டரா, அவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர்
அண்ணாமலை பேசிய கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக மதுரையில் அதிமுக
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து
பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

“நாகரிகமில்லாத அரசியல் பண்பாட்டை தொடர்ந்து விதைத்து வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. வாரணாசியில் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பெற்ற வாக்கை விட குறைவான வாக்கையே இம்முறை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.  பாஜக
தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என உழைத்து உத்தமர்களை திட்டமிட்டு ஒதுக்கி
வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : வெம்பக்கோட்டை அகழாய்வு: சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு!

அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த அண்ணாமலை தொடர்ந்து சூழ்ச்சிகளை செய்து வருகிறார். மோடி அருகில் பழனிசாமியை உட்கார வைத்துவிட்டு இங்கு அதிமுகவை அசைத்துப் பார்க்கும் வேலையில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். இதுவரை தமிழ்நாட்டிற்கு ஏதாவது நிதி பெற்று கொடுத்துள்ளாரா? தென்மாவட்ட மழை வெள்ள
பேரிடருக்கு கூட நிதி பெற்று தரவில்லை, அதிமுகவை பற்றி அண்ணாமலைக்கு என்ன
கவலை. நீங்கள் அதிமுக தொண்டரா, பாஜக தொண்டரா?.அவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை?

பழனிசாமி நம்பிக்கை துரோகி என்ற வார்த்தையை அண்ணாமலை வாபஸ் பெறவேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். அதிமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தால் அண்ணாமலை என்ன விளைவுகளை எதிர்கொள்வார்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.