சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “அதிமுகவும், திமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வருவதை 3 மாத காலமாக கூறி வருகிறோம், பாஜகவின் முழு ஆதரவுடன் இந்த முயற்சி நடைபெற்றது. அதிமுக திமுக தற்போது வரை குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயன்று வருகின்றனர். இதனால் அதிமுகவில் இருந்து மூத்த தலைவர்கள் விலகி வருகின்றனர். திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறவும் இதுதான் காரணம். இதற்கும் தவெகவிற்கும் சம்மந்தம் இல்லை. இனி தமிழ்நாட்டில் எப்போதும் கூட்டணி ஆட்சி தான்.
ஆளுநருடனா சந்திப்பு அலுவல் ரீதியிலான, மரியாதை நிமித்தமான சந்திப்புதான்; உயர்கல்வித்துறை அமைச்சரும் உடன் வந்திருந்தார்; முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை, உரிமையும் எங்களுக்கு இல்லை
போதைப் பொருள் சர்ச்சை தொடர்பாக அமைச்சர் சரத்குமார் விளக்கம் கொடுத்துள்ளார். அதுகுறித்து நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.
கூட்டணி கட்சிகளின் முழு ஆதரவுடன் தான் தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோர் குடும்பத்திற்கு சேர்த்து வைத்த சொத்தை காப்பாற்ற முயற்சி செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இந்த நொடி வரை திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயல்கிறது. மக்கள் தீர்ப்புக்கு எதிராக ஸ்டாலின் பயணிப்பதால் தான் கூட்டணியில் இருந்து வெளியேறுகின்றனர. இன்னும் 2 வருடங்களில் திமுக, அதிமுக பாஜகவின் அமைச்சரவையில் இடம்பெறும் நிலை உருவாகும்” என்று அவர் தெரிவித்தார்.



