ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!

ஜப்பனில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஆடவர் மற்றும் மகளிருக்கான டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆசிய விள்ளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் அணி ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் ஏற்னவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது ஹர்மன்ப்ரூத் கவுர் தலைமியில் மகளிர் கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி மகளிர் கிரிக்கெட் அணியில், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், விக்கெட் கீப்பர் ஜி.கமலினி, பாரதி புல்மாலி, ஸ்ரீசரணி, ரேணுகா சிங், கிராந்தி கவுட், அருந்ததி ரெட்டி, ஷ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், நந்தினி ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆசிய கண்டத்தை சேர்ந்த 10 ஆடவர் கிரிக்கெட் அணியும், 8 மகளிர் கிரிக்கெட் அணியும் விளையாட உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.