பீட்சா 4 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…!

பீட்சா 4 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பீட்சா’.சி.வி.குமார் தயாரித்திருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், கருணாகரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கார்த்திக் சுப்புராஜின் அறிமுக படமான பீட்சா படம் பெரும் வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பீட்சா 2,3 பாகங்கள் வெளியாகின. ஆனால் அவை பீட்சா 1 அளவிற்கு வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் பீட்சா 4 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை சி.வி.குமார் தயாரிக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.