ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் ரயில்வே பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்புகிறது. அந்த வகையில் தற்போது, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பின் படி
காலியிடங்கள்:
- டெக்னீஷியன் கிரேடு-I (சிக்னல்) – 323 பணியிடங்கள்
- டெக்னீஷியன் கிரேடு-III – 6,242 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
- டெக்னிஷியன் கிரேட் 1- இயற்பியல்/எலக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ்/ தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் (BSC) அல்லது 3 ஆண்டுகள் பொறியியல் டிப்ளமோ அல்லது மேற்கண்ட அடிப்படைப் பொறியியல் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் (B.E.B.Tech.)பெற்றிருக்க வேண்டும்.
- டெக்னிஷியன் கிரேடு III பணி: இந்த பணியிடங்களுக்கு விண்ணபிபிப்பவர்கள் மெட்ரிகுலேஷன் / பத்தாம் வகுப்புடன் ஐடிஐ அல்லது அப்ரெண்டீஸ் டிரெயினிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
- வயது வரம்பை பொறுத்தவரை 29.07.2026 தேதிப்படி கணக்கிடப்படும்.
- டெக்னிஷியன் கிரேட் 1 சிக்னல் பணிக்கு 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- டெக்னிஷியன் கிரேட் III பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகைகள் உண்டு. பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உச்ச வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
சம்பளம்:
- டெக்னிஷியன்கிரேட் 1 சிக்னல் மத்திய அரசின் ஊதிய கமிஷன் லெவல் 7 படி ரூ.29,200 அடிப்படை சம்பளமாக வழங்கப்படும்.
- டெக்னிஷியன் கிரேட் III – லெவல் 2 படி Rs. 19,900/-முதல் வழங்கப்படும்.
தேர்வு முறை:
- கணிணி வழியிலான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை என மூன்று கட்ட தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி…?
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே தேர்வு வாரிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
- விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி தரப்படும்.
- எஸ்சி/ எஸ்டி, பெண்கள், இபிசி, மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். தேர்வு எழுதிய பிறகு முழு கட்டணமும் திருப்பி தரப்படும்.
முக்கிய தேதிகள்
- இந்த பணியிடங்களுக்கு இன்று 30 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் ஜூலை 29 ஆம் தேதியாகும்.




