ஆஹா.. வந்துட்டான்யா! – தமிழ்நாட்டில் ஒரே நாளில் எகிறிய கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டபோதிலும்,…

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டபோதிலும், உயிரிழப்புகளை தடுக்க முடிந்ததே தவிர, நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. பல்வேறு வகையிலான கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : NCL 2023 : அதிரடி காட்டிய மதர் தெரசா பொறியியல் கல்லூரி; 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தல்

அண்மைக் காலமாக இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. XBB 1.16 என்ற புதிய வகை கொரோனா பரவலால், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தெலங்கானா, தமிழ்நாடு, ராஜஸ்தான், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகளும், மத்திய அரசும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 634 ஆக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 பேர் இன்று கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.