முக்கியச் செய்திகள் தமிழகம்

மின்சாரம் தாக்கி விவசாய கூலி தொழிலாளி பலி

பொன்னேரி அருகே உயர் மின் அழுத்த மின்சாரகம்பி அறுந்து விழுந்ததில் விவசாய கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மெதூர் கிராமத்தில் வசித்து வருபவர் கதிர்வேல். விவசாய கூலி தொழிலாளரான இவர் அதே பகுதியில் விவசாய பணிக்காக சென்று கொண்டிருந்த போது உயர் அழுத்த மின்சாரகம்பி ஒன்று அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம்  குறித்து  பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாக மி்ன் கம்பி அறுந்து விழுந்து விவசாய கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மது கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருந்த போலீசார் பணியிடை நீக்கம்

Jeba Arul Robinson

‘சாதிய வன்மத்தையே காட்டுகிறது’ – பாமக நிறுவனர் ராமதாஸ்

Arivazhagan Chinnasamy

நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வீடுகள் கட்டித்தர அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவு

Jeba Arul Robinson