மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த மணமகள்: மணப்பெண் ஆன சகோதரி!

மணமேடையில் சரிந்து விழுந்து மணமகள் திடீரென மரணமடைந்ததால், அவர் சகோதரி திடீர் மணப்பெண் ஆன சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. கொரோனா கொடுங்கரம் கொண்டு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும் ஒரு பக்கம் திருமணங்களும் நாடு முழுவதும்…

மணமேடையில் சரிந்து விழுந்து மணமகள் திடீரென மரணமடைந்ததால், அவர் சகோதரி திடீர் மணப்பெண் ஆன சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

கொரோனா கொடுங்கரம் கொண்டு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும் ஒரு பக்கம் திருமணங்களும் நாடு முழுவதும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா (Etawah) மாவட்டத்திலுள்ள சமஸ்பூரைச் சேர்ந்தவர் மஞ்சேஸ் குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரபி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன் திருமணத்துக்கான ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து வந்தது.

உறவினர்கள் முன்னிலையில், மணமகன் – மணமகள் மாலை மாற்றும் சம்பவங்கள் முடிந்து தாலி கட்ட வேண்டிய நேரம் வந்தது. அப்போது மணமகள் திடீரென்று மயங்கிவிழ, அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சி. உடனடியாக மருத்து வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வந்து பரிசோதித்த அவர், மணமகள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து மகிழ்ச்சியாக இருந்த கல்யாண வீடு களையிழந்து சோகமயமானது. இந்நிலையில் திருமணத்தை நிறுத்த வேண்டாம் என்று முடிவு செய்த இரண்டு குடும்பத்தினரும், மரணமடைந்த சுரபியின் சகோதரி நிஷாவை திடீர் மணமகளாக்கி மேடையேற்றினர். சுரபியின் உடலை ஒரு அறையில் வைத்துவிட்டு, அடுத்த சில நிமிடங் களில் அவசரமாக நடந்து முடிந்தது திருமணம்.

இதுபற்றி சுரபியின் சகோதரர் சவுரப் கூறும்போது, அந்த இக்கட்டான சூழலில் என்ன செய்வதென்று தெரிய வில்லை. அப்போது உறவினர் ஒருவர் திருமணத்தை நிறுத்த வேண்டாம் என்றும் என் சகோதரி நிஷா, அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் சொன்னார். இரண்டு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டோம். பிறகு குறிக்கப்பட்ட நேரத்தில் திருமணத்தை நடத்தினோம்’ என்றார். திருமணத்துக்குப் பிறகு சுரபிக்கான இறுதிச் சடங்கை செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.