நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு, பிரதமர் கேர்ஸ் நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா 2ம் அலை நாட்டில் அதிதீவிரமாக பரவி வந்த நிலையில் இந்தியாவில் மட்டும் இதுவரை கொரோனாவால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிலை கவலைக்குள்ளாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் நிதியுதவி அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அந்த குழந்தைகளுக்கு 18 வயது முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், 23 வயது ஆகும் போது 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இலவச கல்வி, கல்வி கடன், ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு உள்ளிட்டவையும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,617 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







