திற்பரப்பு அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

திற்பரப்பு அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலாபயணிகள்  குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் கோதையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.   முக்கிய சுற்றுலாதலமான திற்பரப்பு…

திற்பரப்பு அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலாபயணிகள்  குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
இதனால் கோதையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.   முக்கிய சுற்றுலாதலமான திற்பரப்பு அருவியில் அதிகளவில் தண்ணீர் கொட்டியது.  சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி,  கடந்த 5-ம் தேதி முதல் அருவியில் குளிக்க  பேரூராட்சி நிர்வாகம் தடைவிதித்தது.

இதையும் படியுங்கள்:  வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்த நிலையில் நேற்று முதல் மாவட்டத்தில் பெய்து வந்த மழை சற்று தணிந்தது. கோதையாற்றில் நீர்மட்டமும் சற்று குறைந்தது.  இதனையடுத்து திற்பரப்பு அருவியின் ஒரு பகுதியில் சுற்றுலாபயணிகள் இன்று முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.  தீபாவளி விடுமுறையை கொண்டாட திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலாபயணிகள் குடும்பத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.