குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ!

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு அதிமுக எம்.எல்.ஏ அறுசுவை உணவுகளை வழங்கினார்.  இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதந்தோறும் கடைசி வெள்ளி…

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு அதிமுக எம்.எல்.ஏ அறுசுவை உணவுகளை வழங்கினார்.  இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதந்தோறும் கடைசி வெள்ளி அன்று நடைபெறுவது வழக்கம்.  இக்கூட்டம் இன்று காலை 11 மணி முதல் மதியம் 2 அல்லது 3 மணி வரை நடைபெறும்.  இதனால் இதில் பங்கேற்கும் ஏராளமான விவசாயிகள் மதியம் உணவு சாப்பிட 5 மணி ஆகிவிடுகிறது.  இதனால் விவசாயிகளின் பசியை போக்குவம் வகையில் இந்த வாரத்தில் ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அங்குள்ள பொதுமக்கள் அமரும் அறையில் வைத்து அதிமுகவை சேர்ந்த சிவகங்கை எம்.எல்.ஏ செந்தில்நாதன் விவசாயிகளுக்கு மதியம் உணவு சாம்பார்,  ரசம்,  அப்பளம், கூட்டு,  பொறியல், முட்டையுடன் வழங்கினார்.

பின்னர் இனிவரும் அனைத்து கூட்டத்திலும் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.  பின்னர் விவசாயிகள் எம்.எல்.ஏவிற்கு நன்றி தெரிவித்து சென்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனகா காளமேகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.