முக்கியச் செய்திகள் தமிழகம்

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு; நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மனு தாக்கல்

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு தொடர்பாக  இடைக்கால நிவாரணம் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை
எதிர்த்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது தரவாளர் வைரமுத.து உள்ளிட்டோர்
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்படும்
வரை அல்லது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அ.தி.மு.க
பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.


இந்நிலையில் இந்த வழக்கில் பதில் மனு மற்றும் விளக்க மனு தாக்கல் செய்த
ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் தரப்பு பரஸ்பரம் குற்றம்சாட்டியிருந்தனர்.  இந்த வழக்கு கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைரமுத்து தரப்பில் வழக்கை ஒத்திவைக்க கோரப்பட்டது

அதேவேளையில் ஈ.பி.எஸ் தரப்பில், கட்சி செயல்பாடுகளில் தொய்வு இல்லாமல் இருக்க
இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வேண்டும் என கோரினர். அந்த கோரிக்கையை ஏற்று, இடைக்கால நிவாரணம் குறித்து ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.


அதன்படி இடைக்கால மனு தாக்கல் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற
வாய்ப்பு உள்ளது, எனவே அந்த சமயத்தில் கட்சி பணிகளில் இடையூறு விளைவிக்க
கூடாது* என்றும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் வந்தால், அச்சமயத்தில் அ.தி.மு.க
கட்சி மற்றும் சின்னம், உள்ளிடவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக
ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.


மேலும், பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அதனை காரணம் காட்டி ஏற்கனவே கட்சி விதிகளில் கொண்டு வந்த மாற்றத்தை தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர்.

இது கட்சி பணிகளில் தொய்வு ஏற்படுத்தியுள்ளது, எனவே இது தொடர்பாகவும் தேர்தல்
ஆணையத்துக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் இடைக்கால மனுவில்
ஈ.பி.எஸ் கோரிக்கை வைத்துள்ளார்

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு
வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில்
வரும் 12ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது!

EZHILARASAN D

சேலம் அரசுப் பேருந்தில் இருந்து நடத்துனர் தவறி விழுந்து உயிரிழப்பு

Web Editor

தமிழ்நாட்டில் புதிதாக 1,693 பேருக்கு கொரோனா பாதிப்பு

Halley Karthik