எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரித்து போராட்டம்: பாஜகவினர் கைது

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினைரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்…

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினைரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தார். மேலும் பாஜகவில் இருந்து பிரிந்த நிர்மல் குமார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் வைத்துள்ளார்.

இந்நிலையில் கூட்டணி தர்மத்தினை மீறி பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக இளைஞரணியினர் போராட்டம் நடத்தினர்.கோவில்பட்டி இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் அதன் மாவட்ட தலைவர் தினேஷ்ரோடி தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி, மாவட்ட பொருளாளர் பொன்ராஜ் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.