ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று இல்லை எனவும், லேசான காய்ச்சல் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, இயக்குநர் பாரதிராஜா மாற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கொரோனா தொற்றிலிருந்து விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘நீட் தேர்வு; தோல்வி பயத்தில் மாணவி உயிரிழப்பு
அதேபோல, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தி அறிந்ததாகவும், அவர் பூரண நலம் பெற்று மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று இல்லை எனவும், லேசான காய்ச்சல் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் ஓபிஎஸ் வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.








