அரியலூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி நிஷாந்தினி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ரயில்வே காலனி தெருவைச் சேர்ந்தவர் நடராஜனின் மகள் நிஷாந்தினி, 12-ஆம் பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த அவர், நாளை நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைச் செய்தி: ‘மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.290 அடியாக அதிகரிப்பு!’
உயிரிழந்த மாணவி நிஷாந்தினி, நீட் தேர்வை இரண்டாவது முறையாக எழுதத் தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், மாணவி தன் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணங்களை தவிர்ப்போம். இலவச ஆலோசனைக்கு… – 104ல் பேசலாம்…








