குடியரசு தலைவர் பதவி எப்போது உருவானது? அதன் பணிகள், அதிகாரங்கள் என்ன?

இந்திய நாட்டில் குடியரசு தலைவர் பதவி எப்போது உருவானது. அதன் பணிகள் என்ன? அதிகாரங்கள் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு. பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்த இந்திய நாடு,1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15…

இந்திய நாட்டில் குடியரசு தலைவர் பதவி எப்போது உருவானது. அதன் பணிகள் என்ன? அதிகாரங்கள் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.

பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்த இந்திய நாடு,1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று, விடுதலை அடைந்தது. விடுதலைக்கு பின் அனைத்து அமைப்புகளும் மறு கட்டமைப்புக்கு உட்படுத்தப்பட்டன. இந்திய நாட்டுக்கென தனியாக அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.1950 ஆண்டு.ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அதுவரை கவர்னர் ஜெனரலாக இருந்த பதவி, குடியரசுத்தலைவர் ஆக உருமாற்றம் பெற்றது.

இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகன் என்று குறிப்பிடப்படுகிறார். இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். அத்துடன் சட்டமியற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகள், மாநில சட்டபேரவைகள், உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளின் பாதுகாவலராகவும், குடியரசுத்தலைவர் செயல்படுவார். இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். மாநிலங்களின் சட்ட பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பர். இவருக்கு துணையாக குடியரசுத்துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். அதே சமயம் பிரதமரும் அமைச்சரவையுமே செயல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர்.

இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் ஆவார், தற்போது 14 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. .இதுவரை பதினான்கு பேர் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 15 வது குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. பாஜகவின் திரவுபதி முர்மு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், முன்பு பாஜகவில் இருந்து, இப்போது திரிணாமூல் காங்கிரஸ்காரராக இருந்த யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். நாட்டின் 75 வது விடுதலை ஆண்டில் குடியரசு தலைவர் யார் என்பது, ஜுலை 21 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியும்.

குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமாவார். குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைப்பார்.தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடரிலும், ஆண்டின் தொடக்கம், பட்ஜெட், இன்னும் பிற முக்கிய நேரங்களில் நாடாளுமன்றங்களை கூட்டுதல், கூட்டமுடிவில், கூட்டநிறைவை அறிவிப்பை வெளியிடுதல், மக்களவையின் பதவிகாலம் முடியும் போதோ, அல்லது எந்த அர்சியல் கட்சிக்கும் பெர்ம்பான்மை இல்லாத போது மக்களவையை கலைக்கும் அதிகாரம், நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை ஒப்புதல் வழங்கி சட்டமாக்குதல் குறித்த அறிவிப்பு. சில சட்ட மசோதாக்களின் மீது இரண்டு அவைகளுக்கும் இடையே எழும் முரண்பாடுகளை களைந்து நாடாளுமன்ற கூட்டுக்கூட்டதிற்கு அழைப்பு விடுத்தல், ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெறும் முதல் கூட்டத்தொடரிலும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார்.

இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவைகளில் நடைமுறை அனுபவமுள்ள 12 பேரை மாநிலங்களைவை உறுப்பினராகவும்,  ஆங்கிலோ-இந்திய சமூகத்தை சேர்ந்த இருவரை மக்களவை உறுப்பினராகவும் நியமனம் செய்யலாம். எல்லை மீறி செல்லும் குறிப்பிட்ட காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை, தேர்தல் ஆணையம் மற்றும் சட்ட அமைச்சகம்,சட்ட நிபுணர்கள் ஆலோசனையின் பேரில் தகுதிநீக்கம் செய்யலாம். நாடாளுமன்றம் கூடாத நேரங்களில் அவசர சட்டங்களை பிறப்பிக்கிறார். இது ஒரு நாடாளுமன்ற சட்டம் போலவே கருதப்படும். இவ்வகை அவசர சட்டங்கள் நாடாளுமன்றம் கூடிய ஆறு வாரங்களுக்குள் நாடாளுமன்ற ஒப்புதல் அளிக்கப்படவேண்டியது அவசியம். தலைமை தணிக்கை அலுவலர், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம், நிதிக்குழு போன்ற அமைப்புகளின் ஆண்டறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கிறார்.

அண்மைச் செய்தி: ‘நீட் தேர்வு; தோல்வி பயத்தில் மாணவி உயிரிழப்பு’

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மக்களவையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரை பிரதமராக பிரதமராக நியமித்து, பரிந்துரைப்படி அமைச்சர்கள் நியமனம்,உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்,அரசின் தலைமை வழக்கறிஞர்.நிதி ஆணையத்தை நிறுவுதல், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் வெளி நாட்டுத் தூதுவர்களை அமைச்சரவையின் பரிந்துரைப்படி நியமிப்பார்.உச்ச நீதிமன்றம் அளித்த தண்டனையைக் குறைக்க ஆகிய சிறப்பு அதிகாரங்கள் குடியரசு தலைவருக்கு உண்டு.

போர், வெளிநாட்டு அச்சுறுத்தல், ஆயுதமேந்திய கிளர்ச்சி போன்ற நேரங்களில் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தேசிய அவசரநிலையை அமல்படுத்துவார். மத்தியில் மட்டுமல்ல மாநிலங்களில் அரசு பெரும்பான்மையை இழக்கும் போது, வேறு கரணங்களுக்காக 356 வது சட்ட பிரிவை பயன்படுத்தி, சட்டமன்றத்தை கலைத்து, மாநிலத்தில் ஆளுநரின் தலைமையில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உண்டு

– ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.