பேனா நினைவுச் சின்னம் – கட்டுமானத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு

பேனா நினைவுச் சின்னக் கட்டுமானத்திற்கு தடை விதிக்க கோரி  தொடர்ந்த வழக்கு வரும் மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா…

பேனா நினைவுச் சின்னக் கட்டுமானத்திற்கு தடை விதிக்க கோரி  தொடர்ந்த வழக்கு வரும் மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

இந்நிலையில், பேனா நினைவுச் சின்னக் கட்டுமானத்திற்கு தடை விதிக்க கோரி  தொடர்ந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. மனுதாரர் தரப்பில், பேனா நினைவுச் சின்னத்திற்காக சிஆர்இசட் விண்ணப்பத்தை பரிசீலிக்க ஒன்றிய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மெரினாவிலும், கொட்டிவாக்கம் – கோவளம் வரையிலான கடற்கரையிலும் யாருக்கும் சமாதி அமைக்கக் கூடாது என தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த பேனாச் சின்னம் அமைப்பது தொடர்பாக மொத்தம் 14 துறைகள் பதில் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில் இரண்டு துறைகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அரசாங்கம் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதனால் வழக்கு விசாரணை மார்ச் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.