அதானி வெறும் பொம்மை தான் அவரை செயல்படுத்துவதே பாஜக அரசு தான். எனவே நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கின்றனர் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வைக்கம் நூற்றாண்டு விழா வருகிற 28ம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் ஈரோட்டில் இருந்து வைக்கம் வரை பிரம்மாண்ட ஊர்வலத்தை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: 2வது ஒரு நாள் போட்டி; 117 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்
கேரள காங்கிரஸ் மற்றும் தமிழக காங்கிரஸ் இணைந்து பேரணி நடைபெற இருக்கிறது. இந்த பேரணி வருகிற 28ம் தேதி ஈரோட்டில் இருந்து துவங்கி 30ம் தேதி வைக்கம் சென்றடையும். அதற்கான ஏற்பாடுகளை ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமைலான குழு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த பேரணியை நான் துவக்கி வைக்கிறேன் அந்தப் பேரணி வரலாற்று சிறப்புமிக்க பேரணியாக அமையும்.தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பொழுது வைக்கதில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கலந்து கொண்டார். அங்கேயே தங்கியிருந்து போராட்டம் நடத்தினார் சிறை சென்றார். அந்த போராட்டத்தில் காந்தியும் பங்கேற்றார். எனவே அந்த நினைவை போற்றுகிற வகையில் ஈரோட்டில் இருந்து வைக்கதிற்கு பேரணி நடைபெற இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் அதானி குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு விவாதம் செய்யாமல் இருக்கும் பாரதிய ஜனதாவை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதானி என்பவர் வெறும் பொம்மை தான். அவரை இயக்குவதே மத்திய பாஜக அரசு தான். அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு அவர்களே எப்படி விவாதிப்பார்கள் என்று கூறினார்.