முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அதானி குழும விவகாரம் – நண்பகல் வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

அதானி குழும விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. 

2023-ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.  2023-24 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் விவாதங்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடைபெற தொடங்கின. இந்த விவாதத்தில் அதானி குழும விவகாரம், பிபிசி ஆவணப்படம் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாக எதிர்கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்தன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும், அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும் அதானி குழுமத்தைச் சார்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் வலுவாக காட்டுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் கடந்த சில நாட்களாக அதானி குழுமம் வரலாறு காணத அளவிற்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்.பி.ஐ. கடன் வழங்கி உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை இரு நாட்களாக அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற இருஅவைகளும் முடங்கின.

இந்நிலையில், அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான புகார்கள் குறித்து எந்த ஒரு விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மவுனம் காத்து வருகிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள  நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியன. இந்த ஆலோசனையில், காங்கிரஸ், திமுக, கேரள காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், சமாஜ்வாதி உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டன. அதனைத் தொடர்ந்து டெல்லி நாடாளுமனற் வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, அதானி குழும விவகாரத்தில் கூட்டுக்குழு அல்லது உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதன் பின்னர் இன்று காலை தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள்  மீண்டும் அதானி குழும விவகாரம் குறித்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

யாழன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மு.க. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக தாக்கி பேசட்டும்: நடிகை குஷ்பு

Saravana

”முல்லை பெரியாறு அணை உரிமைக்காக மீண்டும் போராட தயார்” – வைகோ பேச்சு

Web Editor

கர்நாடகாவில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரியூட்ட லஞ்சம் கேட்கும் அவலம்!

G SaravanaKumar