30 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த போர்ச்சுக்கல் செல்லப்பிராணி.
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த டினி கிராமத்தை சேர்ந்த பாபி எனும் செல்லப்பிராணி 30 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த செல்லப்பிராணிக்கு உலகின் மிகவும் பழமையான நாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பாபி ஃரபேரியோ அலன்டேஜோ (Rafeiro do Alentejo) என்ற நாய் வகையை சார்ந்தது. இந்த வகையை சார்ந்த நாய்களின் சாராரி ஆயுட்காலம் 12 முதல் 14 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் பாபி செல்லபிராணியாது 30 ஆண்டுகள் கடந்து வாழ்ந்து வருகிறது. அதாவது பாபியின் வயது சரியாக சொன்னால் 30 ஆண்டுகள் 269 நாட்கள் ஆகும்.
இதற்கு முன்பு கடந்த 1939ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒரு நாய் 29 வயது வரை வாழ்ந்து கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம் பெற்றது. தற்போது அதன் சாதனையை பாபி முறியடித்துள்ளது.








