நடிகை சுனேனாவுக்கு கொரோனா பாதிப்பு!

தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகை சுனேனா தெரிவித்துள்ளார். கொரோனா 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. பல மாநிலங்கள்…

தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகை சுனேனா தெரிவித்துள்ளார்.

கொரோனா 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. பல மாநிலங்கள் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளன.

கடந்த சில நாட்களாக, தினசரி கொரோனா பாதிப்பு, நான்கு லட்சத்துக்கும் மேல் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை யின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 26 லட்சத்து 62 ஆயிரத்து 575 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பால், நேற்று மட்டும் 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று காரணமாக சினிமா நடிகர், நடிகைகளும் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை சுனேனாவும் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழில், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர், ‘பலத்த எச்சரிக்கையுடன் இருந்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோ னா விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டின் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக் கிறேன். என் குடும்பத்தினர் தவிர வேறு யாருடன் தொடர்பு கொள்ள வில்லை என்பதால் அவர்களும் தனிமையில் உள்ளனர். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். உயிரை காப்பாற்றுங்கள். அனைவருக்கும் என் பிரார்த்தனை’எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.