புதுச்சேரி சட்டப்பேரவையில் கிருமி நாசினி தெளிப்பு!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.…

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் அறைகளை நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வருகின்றனர். மேலும், முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊரியர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.