மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்பி.க்கள்!

அதிமுக எம்.எல்.ஏக்களான கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும் தங்களது மாநிலங்களை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி யமைத்துள்ளது. அதிமுக 65 தொகுதிகளில் வெற்றி பெற்று பலம்…

அதிமுக எம்.எல்.ஏக்களான கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும் தங்களது மாநிலங்களை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி யமைத்துள்ளது. அதிமுக 65 தொகுதிகளில் வெற்றி பெற்று பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக அமைந்திருக்கிறது.

இந்த தேர்தலில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களான கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும் முறையே வேப்பனஹள்ளி, ஒரத்தநாடு தொகுதிகளில் போட்டி யிட்டு வெற்றிபெற்றனர். இதனால் இவர்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு, எம்.எல்.ஏ. பதவியை தொடர்வார்களா? அல்லது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு எம்.பி.யாக தொடர்வார்களா? என்று கேள்வி எழுந்தது.

இதுபற்றி கட்சி தலைமையுடன் ஆலோசித்து முடிவு செய்வோம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர்கள், தங்களது மாநிலங்களை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.