‘ஹேம்நாத் செய்த கொடுமையின் காரணமாகவே நடிகை சித்ரா உயிரை மாய்த்துக் கொண்டார்’

சித்ராவின் கணவர் ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்த கொடுமையின் காரணமாகவே நடிகை சித்ரா உயிரை மாய்த்து கொண்டதாக அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சின்னதிரை…

சித்ராவின் கணவர் ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்த கொடுமையின் காரணமாகவே நடிகை சித்ரா உயிரை மாய்த்து கொண்டதாக அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சின்னதிரை நடிகை சித்ராவின் உயிரிழப்பு தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்குத் தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. மேலும், ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனுத் தாக்கல் செய்த சித்ராவின் தந்தை காமராஜை, ஹேம்நாத் மனுவில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி, காமராஜ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், உயிரிழந்த சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதால், ஹேம்நாத்தை சந்தேகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடகத்தில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கக் கூடாது எனச் சித்ரவதை செய்த ஹேம்நாத்தால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனது மகளைச் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘‘அரசுத் திட்டங்களை மக்கள் பிரதிநிதிகளும், பொதுமக்களும் கண்காணிக்க வேண்டும்’ – அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன்’

மேலும், சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில், பெண் தோழிகளை வீட்டிற்கு ஹேம்நாத் அழைத்து வந்ததாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் போதுதான் தனது மகள் உயிரிழந்ததாகவும்  காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காகவே தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோருவதாகவும், போதிய ஆதாரங்கள் உள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விசாரணையை எதிர்கொள்வதே சரியானது எனவும், எனவே ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யாமல், அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.