‘அரசு திட்டங்களை மக்கள் பிரதிநிதிகளும், பொதுமக்களும் கண்காணிக்க வேண்டும்’

அரசுத் திட்டங்களை ஒப்பந்ததாரர்கள் எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதனை மக்கள் பிரதிநிதிகளும், பொதுமக்களும் கண்காணிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். காளையார்கோவில் அருகே செங்குளம் கிராமத்தில் நீர்வளத்துறைச்…

அரசுத் திட்டங்களை ஒப்பந்ததாரர்கள் எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதனை மக்கள் பிரதிநிதிகளும், பொதுமக்களும் கண்காணிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

காளையார்கோவில் அருகே செங்குளம் கிராமத்தில் நீர்வளத்துறைச் சார்பில் சருகனி ஆறு வடிநில கோட்டத்திற்குட்பட்ட காளையார்கோயில் மற்றும் இளையான்குடி வட்டத்தில் உள்ள 17 கண்மாய்களை ரூ10.52 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் மற்றும் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தனர், அப்போது பேசிய அவர், அரசுத் திட்டங்களை ஒப்பந்ததாரர்கள் எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை மக்கள் பிரதிநிதிகளும், பொது மக்களும் கண்காணிக்க வேண்டும் எனக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘ரயில் நிலையங்களில் பார்வை திறன் சவாலுடையவர்களுக்கு உதவச் சிறப்பு ஏற்பாடு’

தொடர்ந்துபேசிய அவர், பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மக்களுக்காக அரசுத் திட்டங்களுக்கு அனுமதியளித்தாலும், அதிகாரிகள் தலைமையில் ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளும் பணிகளை அப்பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும், பொதுமக்களும் இத்திட்டம் நமக்கான திட்டம் என்பதனை உணர்ந்து பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதனை கண்காணித்து ஒப்பந்தக்காரர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் எனப் பேசினார். இவ்விழாவில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.