நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் நூதன வழிபாடு!

நாமக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில்  நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் திருக்கோயிலில், தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பெரிதும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள லோகேஷ்…

நாமக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில்  நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் திருக்கோயிலில், தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பெரிதும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் வருகின்ற 19-ம் தேதி வெளிவர உள்ள லியோ திரைப்படம் வெற்றிப்பெற வேண்டும் என நாமக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில், நாமக்கல்லில் உள்ள 18 அடி உயரம் கொண்ட ஒரே கல்லில்லான புகழ்பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோயிலில் விஜய்-ன் புகைப்படத்தை வைத்து மாவட்ட இளைஞரணி சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கத்தின் மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ்
தலைமையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் தங்கத்தேரினை இழுத்து நூதன முறையில் வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.