கிரிக்கெட் உலகின் ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் சூர்யா சந்தித்த படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் சூர்யா நடித்து வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் அவரது ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தப் படங்கள் இந்திய அளவிலும் கவனம் பெற்றது.

அண்மையில் விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா “ சரியான படங்கள் இல்லாமல், ரசிகர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கிற மாதியான படங்களை கொடுக்க முடியாமல் இருந்தேன். மேலும் என்னை நிரூபிப்பதற்கான படங்கள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தே. அந்த நிலையில் சூரரை போற்று படம் வெளியானது. அதனை தந்த இயக்குநர் சுதா கொங்கராவிற்கு நன்றி “ என உருக்கமாக பேசினார்.
மேலும் மத்திய் அரசின் சார்பில் நடைபெற்ற 68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் “சூரரைப் போற்று” திரைப்படத்திற்கு 5 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சூர்யாவிற்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
இதனையும் படியுங்கள்: நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த கிளிகள் பறிமுதல்
சூரரைப் போற்று , ஜெய்பீம் படங்களை தொடர்ந்து அடுத்தாக வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் என சூர்யா படு பிஸியாக உள்ளார். இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகின்றது.
மும்பையில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சூர்யா சந்தித்த படங்கள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. சூர்யா-சச்சின் இணைந்து இருக்கு படங்கள் ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
–யாழன்







