சென்னை போயஸ் கார்டனில் வீரநடை போட்ட நடிகர் ரஜினிகாந்த் – வீடியோ வைரல்

நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.   நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னை…

நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையதளங்களில் பரவியது.

ரஜினிகாந்தி நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போன்ற சில நிமிட காட்சிகள் இணையதளங்களில் பரவியதையடுத்து, படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. இதனிடையே, ரஜினிகாந்தை போய்ஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடிகர் ராஜேஷ் சந்தித்தார். சென்னை திரைப்படக் கல்லூரியின் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டதால் ரஜினிகாந்தை பார்த்து வாழ்த்து பெற்றார்.

 

https://twitter.com/SenthilraajaR/status/1572896174423801857

 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் பகுதியில் நடைபயிற்சி சென்ற வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. தனக்கே உரிதான ஸ்டைலான நடையில் அவர் நடந்து செல்வதை ரசிகர் ஒருவர் தன்னுடைய செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த காட்சிகள்தான் தற்போது வைரலாகி வருகிறது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.