மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!!

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அண்மையில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம்…

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அண்மையில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக இன்று படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அவ்வப்போது வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் பயணம் செய்வது வழக்கம். கடந்த மாதம், இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த், பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபட்டார். மேலும் அரசியல் தலைவர்கள் சிலரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்.

இதையும் படியுங்கள் : சுதந்திர தினத்தில் வெளியாகிறது ’புஷ்பா 2’ – ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!!

இந்நிலையில் மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடினார். இது தொடர்பான புகைப்படங்களை தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அன்வர் இப்ராஹிம், தொடர்ந்து களத்திலும், திரையுலகிலும் நடிகர் ரஜினிகாந்த் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.