சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற பேச்சு ஏற்படுத்திய சர்ச்சை அடங்காத நிலையில், தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பக்கதில் கொசுவத்தி சுருள் படத்தை பகிர்ந்திருக்கிறார்.
செப்டம்பர் 2ம் தேதி தமுஎகச சார்பில் சென்னையில் “சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “ இந்த மாநாட்டிற்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பெயர் வைக்கவில்லை. சனாதன ஒழிப்பு மாநாடு என மிகச் சரியாக வைத்துள்ளீர்கள். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதுதான் சிறந்தது. எப்படி டெங்கு, மலேரியா மற்றும் கோவிட் போன்றவற்றையும் ஒழித்துள்ளோமோ அதே போல சாதி மற்றும் ஏற்றத் தாழ்வுககளை ஊக்குவிக்கும் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என பேசியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சனாதன தர்மம் குறித்து உதயநிதியின் இந்த பேச்சு, பல மாநிலத்தின் முக்கிய தலைவர்களை எல்லாம் கருத்தும், விமர்சனமும் சொல்ல வைத்ததோடு, அளவோடு எதிர்வினையாற்றுங்கள் என்று பிரதமர் மோடியே, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியிருந்ததாகக் கூட ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்த அளவுக்கு, சனாதனக் கருத்து மிகப்பெரிய சர்ச்சைப் போரை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கொசுவத்தி சுருள் படத்தை பகிர்ந்திருக்கிறார். எந்த விளக்கமும், பதிவும் இன்றி, வெறும் கொசுவத்தி சுருள் படத்தை உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
டெங்கு, மலேரியா மற்றும் கோவிட் போன்றவற்றை ஒழித்தது போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் எனக் கூறி அது பேசுப்பொருளாகி உள்ள நிலையில் தற்போது மீண்டும் உதயநிதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். இதனால், கொசுவத்தி சுருள் இன்று எக்ஸ் பக்கத்தில் அதிகம் டிரெண்ட் ஆகிவருகிறது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிவை டேக் செய்து தனது X பக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”நீ விளையாடு நண்பா” என பதிவிட்டுள்ளார்.
நீ விளையாடு நண்பா 🔥 https://t.co/dbG1oNjc44
— Anbil Mahesh (@Anbil_Mahesh) September 11, 2023