ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை லீனா மரியா பால் மற்றும் அவர் கணவர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட லீனா மரியா பால் மற்றும் அவர் கணவர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின் றனர்.
தனியார் நிறுவன விளம்பரதாரரும், தொழிலதிபருமான சிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் என்பவரிடம் ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில், நடிகை லீனா மரியா பாலும் அவரது கணவர் சுகேஷ் சந்திரசேகரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை , மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
நடிலை லீனா மரியா பால், தமிழில் கார்த்தி நடித்த பிரியாணி, இந்தியில் மெட்ராஸ் கபே உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.









