நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!

கரகாட்டக்காரன் திரைப்படப் புகழ்,  பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். இவர் பழம்பெரும் நடிகர் டி.எஸ் பாலையாவின் மூன்றாவது மகன். எனவே ஜூனியர் பாலையா என அழைக்கப்பட்டார். இவருக்கு…

கரகாட்டக்காரன் திரைப்படப் புகழ்,  பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

இவர் பழம்பெரும் நடிகர் டி.எஸ் பாலையாவின் மூன்றாவது மகன். எனவே ஜூனியர் பாலையா என அழைக்கப்பட்டார். இவருக்கு வயது 70. இவரது இயர்பெயர் ரகு பாலையா. கரகாட்டக்காரன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், கோபுரவாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை, வின்னர், கும்கி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனி ஒருவன், புலி உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் எண்ணற்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சாட்டை (2012) இல் ஒரு தலைமை ஆசிரியராக நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். அவர் 2015-ம் ஆண்டில் தனி ஒருவன், புலி உள்ளிட்ட நான்கு படங்களில் தோன்றினார்.

இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.  அவரது உறவினர்கள், நண்பர்கள், திரையுலகத்தினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.