19 அவது ஐபிஎல் தொடரானது நேற்று தொடங்கியது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பெங்களூரு அணி பதிவு செய்தது.
தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 2 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நேருக்கு நேர்
ஐபிஎல் வரலாற்றில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை மொத்தம் 35 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் 24 போட்டிகளில் மும்பை அணியும், 11 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளன.
வேகபந்து வீச்சாளர்களுக்கு சாதகமான வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 10 முறையும் கொல்கத்தா அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
உத்தேச அணி விவரம்
மும்பை : ரோஹித் ஷர்மா, குயின்டன் டி காக் or ரியான் ரிக்கல்டன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், நமன் திர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, அல்லா கசன்ஃபர்.
கொல்கத்தா : ஃபின் ஆலன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, கேமரூன் கிரீன், ரின்கு சிங், ராமன்தீப் சிங், சுனில் நரைன், ரச்சின் ரவீந்திரா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, கார்த்திக் தியாகி.







